தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபோர்டு கார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் - FORD CAR FACTORY WORKERS STRIKE

செங்கல்பட்டு: ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில், தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபோர்டு கார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் , FORD CAR FACTORY WORKERS STRIKE
ஃபோர்டு கார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்

By

Published : May 27, 2021, 10:20 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 3500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தத் தொழிற்சாலையில், கடந்த சில வாரங்களாக, தொழிலாளர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சிலர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

ஊரடங்கு காலத்திலும், தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி பணிக்கு வரவழைத்து வேலை வாங்குவதாகவும், அதனாலேயே தொற்று ஏற்பட்டு சிலர் இறந்ததாகவும், தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் கொதிப்படைந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இன்று (மே 27) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகவலறிந்து தொழிற்சாலைக்கு வந்த மறைமலைநகர் காவல் துறையினர், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இதையும் படிங்க: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு விடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details