செங்கல்பட்டு:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வேடந்தாங்கல் அடுத்த கரிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர், உதயகுமார். இவர் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு, சாலைப் பகுதிகளில் படுத்து உறங்குவார் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் இரு தினங்களுக்கு முன் பாலாற்றுப் பாலத்தூணின் அடித்தளத்தில் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் படுத்து உறங்கி உள்ளார்.