புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரிக்கை விடுத்து, ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்பாேராட்டதிற்குப் பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
சி.ஐ.டி.யூ ஆட்டோ ஓட்டுநர் சங்கம் போராட்டம்! - டெல்லி செல்லும் போராட்டம்
செங்கல்பட்டு: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (டிச.17) ஈடுபட்டனர்.
Auto Driver Association protest
அதே போல, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நேற்று(டிச.17) சி.ஐ.டி.யூ., ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:அரசியல் தியாகங்களில் ரஜினியும் கமலும் ஜீரோ - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தாக்கு