தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Illicit Alcohol deaths : செங்கல்பட்டு எஸ்பி இடமாற்றம்; ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! - செங்கல்பட்டு எஸ்பி இட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான நிலையில், அம்மாவட்ட எஸ்பி பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலால் துணைக் கண்காணிப்பாளர், ஒரு ஆய்வாளர் மற்றும் இரு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

duplicate
உயிரிழப்பு

By

Published : May 15, 2023, 10:12 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் நேற்று(மே.13) முன்தினம் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்றொரு நபரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சிறு மற்றும் குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு கலால் துணைக் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய இறப்புகள் - விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details