செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நான்கு பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, இப்பகுதியில் 40 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து தெருக்கள் முற்றிலும் வெளியே வராத நிலையில் முடக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தை சீல் வைக்க முடிவு! - chengalpattu district officers
செங்கல்பட்டு: மாவட்டம் முழுவதும் சீல் வைத்து முடக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சீல் வைக்க முடிவு!
இந்நிலையில், இப்பகுதியில் நோய் தொற்று பரவுதலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் காவல் உதவி கண்காணிப்பாளர், மருத்துவக் குழு ஆகியோர் நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சீல் வைத்து முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:இருளர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய எம்எல்ஏ