தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் விபத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர் - big boss 2 contestant yashika

கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த், இன்று வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 3:07 PM IST

செங்கல்பட்டு: நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, நோட்டா, கழுகு 2 உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் மக்களிடையே பிரபலமான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த், வள்ளி செட்டி பவனி உட்பட மூன்று நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி அதிகாலையில் காரில் வந்தார்.

அப்போது யாஷிகா ஆனந்த் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததால், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் சாலையோரத் தடுப்பில் மோதிய அந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வள்ளி செட்டி பவனி உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகை யாஷிகா மார்ச் 27ஆம் தேதி ஆஜராகி உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி அவரை வரும் ஜூலை 27ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஃபெப்ஸி சார்பில் செங்கல்பட்டு கலெக்டரிடம் ரூ.35 லட்சம் வழங்கிய ஆர்.கே.செல்வமணி!

ABOUT THE AUTHOR

...view details