தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிக்கு இலவச பேருந்து வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

செங்கல்பட்டு: அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றினைந்து, பள்ளிக்கு இலவசமாக மினி பேருந்து வழங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிக்கு இலவச பேருந்து வழங்கிய முன்னாள் மாணவர்கள்
அரசுப் பள்ளிக்கு இலவச பேருந்து வழங்கிய முன்னாள் மாணவர்கள்

By

Published : Oct 3, 2020, 12:52 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூணாம்பேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு,1990 ஆம் ஆண்டு முதல் 1999 ஆண்டுவரை படித்த மாணவவர்களின் சந்திப்பும், கலந்துரையாடலும் இன்று ( அக்.3 ) நடைபெற்றது.

இப்பள்ளி, 1923ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் 1936ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெற்று, 1971ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்த இப்பள்ளியில் தற்போது சேர்க்கை மிகக்குறைவாக காணப்படுகிறது. போக்குவரத்து வசதியின்மையே சேர்க்கை குறைந்ததற்கு முக்கிய காரணம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

இதனை மனதில் கொண்டு முன்னாள் மாணவர்கள் இப்பள்ளிக்கு புதிய மினி பேருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இப்பேருந்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் பேருந்தை பள்ளிக்கு அர்ப்பணித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும், முன்னாள் மாணவ மாணவிகள் சார்பில் முன்னாள் மாணவர் பேரவை கல்வி அறக்கட்டளை ஒன்று புதியதாக தொடங்கப்பட்டன. இதன் மூலம் ஆண்டுதோறும் மாணவர்கள் அளிக்கும் நிதியை பள்ளி வளர்ச்சிக்காகவும், பேருந்து இயக்கத்திற்கும் பயன்படுத்த தீர்மானித்துள்ளனர்.

மேலும், கடந்தாண்டு 10, 11, 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஆசிரியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் அனைத்து வசதிகளுடன் இலவசக் கல்வி; மாணவர்களுக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details