செங்கல்பட்டு:திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் மூன்று ஆண்கள் பயணம் செய்தனர். அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வந்து கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நிலைதடுமாறிய கார் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் பலமுறை உருண்டு தலை குப்புறக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த மூன்று நபர்களும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார் காருக்குள் சிக்கி உயிரிழந்த மூன்று நபர்களின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தஞ்சை: திருக்காட்டுப்பள்ளியில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!
இதனிடையே, கார் பலமுறை உருண்டு பள்ளத்தில் விழுந்திருந்ததால் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தலை குப்புறக் கவிழ்ந்திருந்த காரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியோடு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நிமிர்த்தினர்.