செங்கல்பட்டு:கோவளத்தில் அடுத்த மாதம் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் பற்றிய கணக்கெடுப்பு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
இதில் பல வெளிமாநிலத்தவர், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் பலர் இங்கு சட்டவிரோதமாகக் குடியிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 76 நபர்களைப் பிடித்து விசாரித்ததில் குறிப்பாக 16 பேர், முறையான ஆவணங்கள் இன்றியும், போலி ஆவணங்கள் தயாரித்தும் தமிழகத்தில் குடியிருந்து வந்தது தெரியவந்தது.