தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைதேர்தலுக்கு 21ஆம் தேதி விருப்பமனு - அதிமுக அறிவிப்பு - இடை தேர்தல்

சென்னை: 4 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டபேரவை இடைத் தேர்தலுக்கான விருப்பமனுவை வரும் 21ஆம் தேதி வழங்கலாம் என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

admk

By

Published : Apr 19, 2019, 6:16 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 19.5.2019 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அன்றே வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details