சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'வருமானவரித்துறை சோதனைகள் எதிர்கட்சிகள் மீதுமட்டும் நடத்த காரணம் என்ன, திமுக, தெலுங்கு தேசம், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரின் வீடுகளில் மட்டும் தொடர் சோதனை நடத்த காரணம் என்ன? பாஜக ஆளும் மாநிலங்கள் அவர்களின் கண்களுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டை ஆள்வது எடப்பாடியல்ல... மோடிதான் - சந்திரபாபு நாயுடு! - மோடி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு ஆளவில்லை என்றும், மோடி தான் ஆள்கிறார் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
NCB
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டை ஆள்வது அதிமுக அல்ல என்றும், மோடி..மு..க..தான். எனவே தமிழ்நாட்டு மக்களிடம் நான் ஜனநாயகத்தை காக்க வேண்டுகோள் விடுக்கிறேன். தேசத்தை ஏமாற்றி அநீதி இழைத்த மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்' என்றார். உறவினரின் திருமண விழாவிற்காக சென்னை வந்திருந்த போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.