சென்னை அசோக் நகரிலுள்ள அமமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி, "அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக அனைவரின் ஒப்புதல் பெயரிலும் டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.ம.மு.க.வின் தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தலைவராக பொறுப்பு ஏற்பார் என்று கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அ.ம.மு.க.வின் தற்போதைய துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமமுகவின் தலைவர் சசிகலாதான் - சி.ஆர் சரஸ்வதி
சென்னை அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சசிகலா விடுதலையானபின் தலைவராக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
இந்த நிமிடம் வரை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா பெயரே இடம்பெற்றுள்ளது. ஓபிஎஸும் ஈபிஎஸும் பா.ஜ.க.வின் ஆதரவோடு இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பொறுப்புகளை பெற்று கட்சிக்கான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். இதை எதிர்த்து எங்கள் சசிகலா விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளார். அ.தி.மு.க. தற்போது அ.ம.மு.க. என்று பெயர் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. மே 23ஆம் தேதி அ.தி.மு.க. தோல்வியை தழுவும், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் இங்குதான் உள்ளார்கள்." என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.