தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதாரம் இல்லாமல் ஆலையை மூடியது தமிழ்நாடு அரசு - ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றச்சாட்டு

சென்னை: மக்களை சமாதானப்படுத்தவே தமிழ்நாடு அரசு எந்தவித ஆதாரமுமின்றி ஆலையை மூடியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.

HC

By

Published : Jun 26, 2019, 5:48 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பு குறித்த தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், மக்களை சமாதானம் செய்யவே தமிழ்நாடு அரசு ஆலையை மூடியதாகவும், ஆலையால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்திருந்தது.

பதில் மனுவின் முக்கிய அம்சங்கள்

  • தூத்துக்குடி ஆலையைத் திறக்க 1.55 லட்சம் பேர் ஆதரவு.
  • ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என 2011ஆம் ஆண்டு நீரி எனும் தேசிய சுற்றுச்சூழல் & பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை.

  • துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சமாதானப்படுத்தவே ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது.

  • மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடிக்குப் பணிந்து 2018-19ஆம் ஆண்டிற்கான ஒப்புதலை தமிழ்நாடு அரசு வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details