தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சரின் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், தருமபுரியில் வாக்குச் சாவடியை கைப்பற்றுவோம் என பேசிய அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சி செய்தி தொடர்பாளர் முஸ்தபா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி- அமமுக
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்களார்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது, பண மாலை போடுவது என ஒட்டுமொத்த தொகுதியிலும் பணத்தை பயன்படுத்தி வருவதால் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அதேபோல், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் வாக்குச் சாவடியை கைப்பற்றுவோம் எனப் பேசிய தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தாலும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் முகாந்திரங்களுடன் கொடுக்கும் புகார்கள் மீது தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறார்" என்றார்.