தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாசாவுக்கு செல்லும் தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள்!

சென்னை: விண்வெளி ஆராய்ச்சி குறித்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்று, தேசிய அளவில் தமிழ்நாடு மாணவ மாணவிகள் தேர்வு பெற்று, நாசா சார்பில் அமெரிக்காவுக்கு 10 நாட்கள் கல்வி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

அமெரிக்கா செல்லும் மாணவர்கள்

By

Published : Apr 11, 2019, 1:26 PM IST

விண்வெளி ஆராய்ச்சி குறித்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் தமிழ்நாடு மாணவ மாணவிகள் தேர்வு பெற்று உள்ளார்கள். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஒரு வார காலம் விண்வெளி ஆராய்ச்சி குறித்து பயிற்சிகளைப் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சாமலாபுரம் லிட்ரசி மிஷன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்யஸ்ரீக்கு அமெரிக்கா செல்வதற்காக ரூபாய் 1.69 லட்சம் காசோலையைப் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்யாஸ்ரீ திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முப்பிடாதி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ மதன் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தனர்.

அதில் இந்து பத்திரிகையில் நாசா குறித்த கட்டுரை எழுதுவதற்கான விளம்பரத்தைப் பார்த்து நாங்கள் கட்டுரை எழுதினோம். நாங்கள் எழுதிய கட்டுரை தேசிய அளவில் 19ஆவது இடத்தைப் பிடித்ததால் எங்களைத் தேர்வு செய்துள்ளார்கள். மொத்தம் 10 நாள் பயிற்சிக்காக எங்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வருங்காலத்தில் நாங்கள் பெரிய விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது எங்களது கனவு என்றும், முனைவர் ஏபிஜே அப்துல் கலாமைப் போன்று நாங்களும் வர வேண்டுமென்று கனவுடன் அமெரிக்கா செல்கிறோம் என்று கூறினார்கள். மேலும், எங்களின் படிப்பு செலவிற்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். தமிழ்நாடு அரசு இதைக் கருத்தில் கொண்டு இவர்களுக்கு உதவ வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்கா செல்லும் மாணவர்களின் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details