தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2019, 9:57 PM IST

ETV Bharat / state

எரிசக்தித்துறையில் 2019- 20ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்!

சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, எரிசக்தித்துறையில் 2019- 20ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் தனது உரையை நிகழ்த்தினார்.

Tamil Nadu Legislative Assembly

சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எரிசக்தித்துறையில் 2019- 20ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் கீழ்வருமாறு:

  1. வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு10 மில்லியன் லிட்டர் நிறுவி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்
  2. புனல் மற்றும் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையம்
  3. அவசர மீட்பு அமைப்பு ரூ.30 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
  4. விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு
  5. சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் பரப்பு சார்ந்த மேம்பாட்டிற்காக தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் நுகர்வோர்களுக்கு வினைத்திறன் மிகுமின்னளவியை வானொலி அலைக்கற்றை பரிமாற்ற தொழில்நுட்ப அடிப்படையில் பொருத்துவதற்கான திட்டம் ரூ.120 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  6. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திலும் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறுவன வள திட்டமிடல் மென்பொருள் செயலாக்கத்திற்குக் கொண்டுவரப்படும்.
  7. புதிய தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதோடு கைமுறை செயல்பாட்டினை குறைப்பதற்காகவும் மற்றும் பெருகி வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சென்னையில் 7 எண்ணிக்கை 33 /11 கி.வோ. முழுமையான தானியங்கி வழிமகாப்பு துணை மின்நிலையங்கள் ரூபாய் 170 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  8. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு ரூபாய் நான்குக் கோடி மதிப்பீட்டில் புதிய மத்திய அலுவலக கட்டடம் அமைக்கப்படும்.
  9. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையத்தைத் தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய மின் பகிர்மான கோட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  10. தலைமை அலுவலகம் மற்றும் கள அலுவலகத்திற்குத் தகவல் தொடர்பு மேம்படுத்தத் தலைமை அலுவலகம் ஒன்பது மண்டல அலுவலகங்கள் மற்றும் 44 மின் பகிர்மான அலுவலகங்களுக்கும் காணொளி மூலம் இணைத்து கருத்தரங்கு நடக்கும் வசதியை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
  11. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தகுதியான நிதியுதவியைத் தவிர்த்து மாநில அரசின் மானியம் 15,000 ரூபாயுடன் புதுப்பிக்கப்பட்ட மூலதன ஊக்கத்தொகை திட்டத்தின் வாயிலாக ஒரு கிலோ வாட் திறன் கொண்ட மின் அமைப்புடன் இணைக்கக் கூடிய சூரிய மேற்கூரை மின் நிலையங்கள் 5000 வீடுகளில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  12. விவசாயத்தில் எரிசக்தி மற்றும் நீர் மேலாண்மை சிக்கனம் என்ற முன்னோடி ஆய்வு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கொள்ளப்படும்.
  13. தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்றும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.
  14. எரிபொருள் மற்றும் மரபு சார்ந்த எரிசக்தி பயன்பாட்டை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் குறைப்பதற்குத் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை ஊக்குவிப்பு என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
  15. நவீனத் தொழில்நுட்ப சோதனை கருவிகள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

ABOUT THE AUTHOR

...view details