தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடுவதில் மகிழ்ச்சி" - ஸ்டாலின்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தியை திமுக வரவேற்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

By

Published : Jul 3, 2019, 12:27 PM IST

இது தொடர்பாக அவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிப்பதாகவும், வழக்குகளைத் தொடுப்பவர்கள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் புரிந்து கொள்ள இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், தமிழ் மொழியானது உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்திய சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழியாக உள்ள தமிழை அப்பட்டியலில் சேர்த்தால் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகிற நிலையில், அவற்றை பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஐந்து பிராந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details