தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தனபால், வரும் 28ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி விவரங்கள் அறிவிப்பு - dhanapal
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
dhan
கூட்டத்தொடர் விவரங்கள்:
- ஜூன் 28 - மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்
- ஜூலை 1ஆம் தேதி திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம்
- ஜூலை 1ஆம் தேதி முதல் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்