நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 149 ரன் எடுத்தது. அதைத் தொடர்ந்து 150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக தொடங்கியபோதும், அதன்பின்னர் தொடர் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வெற்றியை பறிகொடுக்க நேரிட்டது.
ஆட்டத்தின் இறுதி பந்துவரை சென்னை அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை உண்டாக்கியது. இப்போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் தோனி ரன் ரன் அவுட் ஆனதே என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.