தமிழ்நாடு முழுவதுமுள்ள 45 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளதாக சத்யபிரத சாகு கூறினார். அதில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 988 பேரும், 1,522 ஆயுதப்படை காவல் துறையினரும், 1,589 ரிசர்வ் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு -சத்யபிரத சாகு - chennai
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 45 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.
அத்துடன் தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்கு எண்ணும் மையங்களில், மையத்திற்கு இரண்டு அல்லது மூன்று எண்ணும் அடிப்படையில் 800-க்கும் அதிகமான காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 3,768 சட்ட ஒழுங்கு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்தார்.
மேலும், நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் விதிமுறைகள் மீறி வாக்களித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.