சேலம் ஐந்து ரோடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தைப் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார். மேம்பால திறப்பு விழாவில் பேசிய அவர், "சேலம் வளர்ந்துவரும் மாநகரமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தமிழக அளவில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் மேம்பாலங்கள் சேலம் நகரின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
'8 வழிச்சாலை உறுதியாக நிறைவேற்றப்படும்..!' - முதலமைச்சர் உறுதி - palanisamy
சேலம்: "விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்" என்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சேலம் 5 ரோட்டில் ரூ. 441 கோடியில் இரண்டு அடுக்கு மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது மேம்பாலப் பணிகள் தொடங்கி தற்போது முடிவடைந்திருக்கிறது. முதல் கட்டமாக ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலான 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறேன். மேலும் திருவாக் கவுண்டனூர் ரவுண்டானாவில் ஓர் உயர்மட்ட பாலம், ஏ. வி. ஆர். ரவுண்டானா முதல் குரங்கு சாவடி வரை ஓர் உயர்மட்ட பாலம், இரும்பாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் ஆகியவை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சேலத்திற்கு அருகில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் போர்ட் அமைக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம், விரைவுச்சாலை ஆக மாற்றப்பட்டு உள்ளது. அந்தச்சாலை அமைந்தபிறகு சேலம் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளா மாநிலம் ஆகியவற்றிலிருந்து சென்னைக்குச் செல்லும் கனரக வாகனங்கள் எளிதாகச் சென்று வர முடியும்" என்று தெரிவித்தார்.