தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலைமிரட்டல் வருவதாக சாதிக் பாட்ஷா மனைவி போலீசில் புகார் - சாதிக் பாட்ஷா

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனக்கு கொலைமிரட்டல் கடிதம் வந்துள்ளதாக, சாதிக் பாட்ஷா மனைவி ரெஹானா பானு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ரெகனா பானு

By

Published : Jul 5, 2019, 7:20 PM IST

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்நிலையில், திடிரென்று தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் திமுக வின் முக்கிய புள்ளிகளின் நெருக்கடியால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

சாதிக் பாட்ஷா இறப்புக்கு பிறகு திமுக தரப்பிலிருந்து பலமுறை தனக்கு கொலைமிரட்டல் வருவதாக அவரது மனைவி ரெஹானா பானு கூறி வருகிறார். கடந்த மார்ச் மாதம் மிரட்டல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார். தற்போது நேற்று பாண்டிச்சேரியிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஆ.ராசா வழக்கறிஞர்களான கௌதமன், குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகாரளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details