அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தின் நிறுவனர் கார்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார்.
பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறைப்பு; தனியார் கல்லூரி சங்கம் மனு?
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வின் அடிப்படையில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது குறித்து தனியார் கல்லூரி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
அந்த மனுவில், அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வின் அடிப்படையில் 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதேபோல் 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அறிகிறோம். மேலும் 92 பொறியியல் கல்லூரிகளில் 25, 50 அல்லது 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் குறைக்கப்படும் என கூறியுள்ளதாக அறிகிறோம்.
2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தற்போது வரையில் சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எனவே மாணவர்கள், பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் 92 கல்லூரிகளின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், அங்கீகாரம் அளிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரத்தையும் வெளியிட வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.