மக்களவைத் தேர்தல்: பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - election candidate
சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
election candidate
தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் ரா. கோவிந்த சாமி, அரகோணம் தொகுதியில் ஏ கே மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோர் பாமக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மீதம் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விபரம் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.