புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எக்ஸ்ரே, ஸ்கேன் எனப்படும் 'பல்துறை அகநோக்கிகளை' திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எக்ஸ்ரே, ஸ்கேன் எனப்படும் 'பல்துறை அகநோக்கிகளை' திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரைப்பை பரிசோதனை, பெருங்குடல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ரூ. 2.21 கோடி மதிப்பீட்டில் பல்துறை சார்ந்த 15 அகநோக்கிகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்றையதினம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் பித்தப்பை நிலையத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எனப்படும் 'அதிநவீன கதிரியல் இடையிடு தொகுப்பகம்' திறந்து வைக்கப்பட்டது என்று கூறிய விஜயபாஸ்கர், மருத்துவத்துறைக்கு நடப்பாண்டில் பல கோடி ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் கணக்கையும் தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12, 563 கோடி ரூபாயும், உலக வங்கி நிதியின் கீழ் ரூ.2,645 கோடியும், ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ரூ.1,645 கோடியும், மத்திய அரசின் நிதியாக ரூ.2,650 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும், இந்த வருடம் மருத்துவத்துறைக்கு ஒரு மகத்தான ஆண்டாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தியோவிலேயே மருத்துவத்துறையில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழக சுகாதாரத்துறை மேலை நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெறும். சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் கடற்கரை மணல் மற்றும் மலைகளில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.