தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார் மோடி! - துவக்கம்

சென்னை: வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.

மெட்ரோ

By

Published : Feb 9, 2019, 7:57 PM IST

வண்ணாரப்பேட்டை - டிஎம்ஸ் மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து பயணிகள் சேவை நாளை (10-ம் தேதி) தொடங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நாளை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது.

நாளை திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நாளை சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் நடக்க உள்ள விழாவில் மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

நாளை மெட்ரோ ரயில் சேவைத் தொடங்குவதை முன்னிட்டு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மெட்ரோ முதன்மை அதிகாரி பங்கஜ் குமார் பன்சால், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இன்று சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் விழாவிற்கான ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details