தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குளம், ஒரே சுடுகாடு என்பார்களா? சீமான் கேள்வி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு ஒரே குளம், ஒரே கோயில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

seeman

By

Published : Jul 11, 2019, 3:58 PM IST

சென்னை எழும்பூரிலுள்ள, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 262ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறும்போது, ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்குப் பயப்படாமல் போராடியவர் அழகு முத்துக்கோன் என்று கூறினார்.

மேலும், வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதற்குச் சட்டத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறும் ஹெச்.ராஜா அதை அடைக்க வேண்டியது தானே! என விமர்சனம் செய்தார். அதேபோல, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவதே நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இவ்வாறு கூறுபவர்கள் ஒரே நாடு, ஒரே குளம், ஒரே கோவில், ஒரே சுடுகாடு என்று சொல்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது

அதுமட்டுமின்றி, கோதாவரி - காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைத்துவிடுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நதி நீர் இணைப்பு என்பது ஏமாற்று வேலை எனக் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி ஆட்சியில் இருப்பவர்கள்தான் ஆணவக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details