1996ஆம் ஆண்டு புதுச்சேரி முத்தையால் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து, ஈ.என்.கே.ஒய். என்ற தனியார் உணவு நிறுவனத்துக்கு 29 கோடியே 87 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் தொழில் கடனாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த தனியார் நிறுவனம் வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத நிலையில், சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணைசெய்தனர். இந்த விசாரணையில் வங்கி அலுவலர்கள் உதவியுடன் தனியார் நிறுவனம் மோசடி செய்தது உறுதிபடுத்தப்பட்டது.
பண மோசடி வழக்கில் வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சிறை தண்டனை - இந்தியன் வங்கி
சென்னை: இந்தியன் வங்கியில் 29 கோடி ரூபாய் பண மோசடி செய்ய உடந்தையாக இருந்த வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 2003ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி திருநீல பிரசாத், குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மீதமுள்ள நான்கு பேர் (உயிரிழந்த ஒருவரையும் சேர்த்து) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டார்.