தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரையில் தொடர்ந்து வலம்வருவேன்: கமல் - addressing press in Chennai Airport

சென்னை: திரைத்துறை என்பது எனக்கு சோறுபோடும் வேலை, அரசியலில்தான் சம்பாதித்து பசியாற்றவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, இரண்டிலும் தொடந்து இயங்குவேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன்

By

Published : Jun 2, 2019, 7:40 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள தொலைபேசி அழைப்பு வந்தது உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வரவில்லை.

செய்தியாளர்களை சந்தித்த கமல்

மேலும், நான் அரசியலை தொழிலாக எடுத்துக் கொண்டு வரவில்லை, எனவே மக்கள் எனக்கு ஒரு நாற்காலி கொடுத்து இதில் உட்காருங்கள் என்று சொல்லும் வரை நான் எனது தொழிலை (சினிமாவை) செய்வேன். மக்கள் விரும்பும் திட்டங்களை, மொழிகளை ஆளும் அரசுகள் கொடுக்க வேண்டுமே தவிர, மக்கள் விரும்பாத திட்டங்களையோ, மொழியையோ திணிக்க முடியாது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு சரித்திரம் சொல்லும் அவை பொருந்தாது என்பதை...’ எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details