தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குரங்கு கையில் கிடைத்த தேங்காய்' - திமுக வெற்றியை விமர்சித்த ஜெயக்குமார்! - jeyakumar byte

சென்னை: "ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து மக்களை திசை திருப்பி விட்டார். திமுகவின் வெற்றி குரங்கு கையில் கிடைத்த தேங்காய் போன்றது" என்று, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : May 24, 2019, 5:33 PM IST

எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஸ்டாலின் மக்களை திசை திருப்பி தவறான பரப்புரையில் ஈடுபட்டார். திமுகவின் இந்த வெற்றி குரங்கு கையில் கிடைத்த தேங்காய் போன்றதுதான். எதற்கும் உதவாது. நீட் தேர்வு, கதிராமங்கலம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்தும் தமிழகத்தில் வருவதற்கு முக்கியக் காரணம் திமுகதான்.

அதை திரித்து மக்களிடன் பொய்யான பரப்புரையில் ஸ்டாலின் ஈடுபட்டார். நாங்கள் அப்போது சொன்னதுதான் இப்போதும் சொல்கிறோம். ஸ்டாலினின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதற்கான கணக்கு என்றும் பலிக்கப்போவதில்லை. அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். அதேபோல் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details