தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' பாணியில் உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' - அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jun 28, 2019, 9:36 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அடுத்த 10 வருடத்துக்குள் தற்போது இருக்கும் வெப்பநிலையை விட நான்கு மடங்கு உயர்ந்திருக்கும். இமயமலையில் உள்ள பனி பிரதேசங்கள் வேகமாக உருகி வருகிறது. அதனால் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும். அதிக மரங்களை நடவேண்டும். தண்ணீரை வீணாக்கக் கூடாது. பிளாஸ்டிக்கை உபயோகிக்ககூடாது" என்று கூறியுள்ளார்.

மேலும், "இந்த மெஸ்சேஜை குறைந்தது ஒருவருக்கோ அல்லது லட்சம் பேருக்கோ பார்வெர்டு செய்யாமல் அழித்து விடாதீர்கள். உலக வெப்பமயமாதலை தடுக்க ஒருவரால் முடியாது லட்சம் பேர் சேர்ந்தால் அதற்கு எதிராக போராட முடியும்" என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், இதை அனைவருக்கும் தெரியப்படுத்த 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்' பார்முலாவை கடைப்பிடித்துள்ளது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details