தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2019, 2:32 PM IST

ETV Bharat / state

இரண்டு நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் அனல் காற்று வீசும்!

சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

METROLOGY

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழ்நாடு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுச்சேரியில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருவதால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 3 செ.மீட்டரும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 2 செ.மீட்டரும், வால்பாறை சோலையாறு அணை, கன்னியாகுமரி கோடையார் பகுதியில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details