மதிமுக உயர்நிலைக்குழு, அரசியல் ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிட பொதுச் செயலாளர் வைகோ ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
'வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் எழுப்புவேன்..!' - வைகோ
சென்னை: "மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்" என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
MDMK Vaiko elected for Rajya sabha
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எதிர்த்தும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை கூட்டாட்சி தத்துவத்திற்கு கொள்ளி வைக்கின்ற திட்டங்களை எதிர்த்தும் மாநிலங்கவையில் குரல் எழுப்புவேன்" என்றார்.