மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘பொன்பரப்பியில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பானை சின்னம் எந்த வீட்டில் வரையப்பட்டுள்ளதோ அந்த வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. அங்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் பானை சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பதால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருமாவளவனுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்துத்துவ அமைப்பினர். பொன்பரப்பியில் 300, 400 பேர் வாக்களிக்க முடியவில்லை. பொன்பரப்பி பிரச்னையில் தேர்தல் ஆணையம் முறையற்று இயங்கியுள்ளது.