மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் சென்ற ஆண்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார். இது அக்கட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க உதவியது.
நாளை கிராம சபைக் கூட்டம் - கமல் ஆலோசனை - Kamal haasan
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்கள் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மக்கள் நீதி மையத்தின்
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கிராம சபைக் கூட்டங்கள் நாளை முதல் நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ கான்பிரன்ஸ் (Video Conference) மூலம் அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Last Updated : Jun 27, 2019, 10:16 PM IST