தமிழ்நாட்டில் போதிய மழையின்மையாலும், சுட்டெரிக்கும் வெயிலாலும் ஏரிகள் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் தண்ணீரைச் சேமித்துப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டு ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் அவருடைய கோரிக்கையை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சுற்றுச்சூழல் துறையின் மூலம் 28 கோடி பசுமை பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டது.
பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பொதுப்பணித்துறை மூலம் ஏரியை தூர்வாரி ஏரியைச் சுற்றி கரை அமைத்து மூன்று கிமீ தூரம் நடை பாதைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் ஏரிக்கு உள்ளேயே பறவைகள் சரணாலயமும், படகு குழாம் அமைக்கும் பணிகளும் விறுவிறுவென நடைபெறும் நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்பட உள்ளது.
ஆவடி பருதிப்பட்டு ஏரி பூங்கா இக்கோடை விடுமுறையையொட்டி, ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 1000 பேர் இப்பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது சென்னை அருகே திருவள்ளூருக்கும் சேர்த்து, சென்னைக்கும் நடுவில் ஆவடியில் மிகப்பெரிய படகு குழாம், பறவைகள் சரணாலயம் எனச் சிறப்புகள் அமைக்கப்பட்டு வருவது, இப்பகுதி மக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.