தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாராயணசாமி போராட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்! - போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தை ஆதரித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று தர்ணாவில் பங்கேற்கிறார்.

கெஜ்ரிவால்

By

Published : Feb 18, 2019, 3:03 PM IST

கெஜ்ரிவால்
புதுச்சேரி அரசின் 39 மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடிமுட்டுக்கட்டை போடுவதாக கோரி போராட்டம் நடத்தி வரும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை ஆதரித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று போராட்டத்தில் பங்கேற்கிறார்.

டெல்லியில் தமக்கு இடையூறு ஏற்படுத்திய துணைநிலை ஆளுநரைப் போல் புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு கிரண்பேடி இடையூறு ஏற்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிருப்தி உருவாகியுள்ள நிலையிலும் புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இன்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் இன்று புதுச்சேரி வந்து போராட்டத்தில் பங்கேற்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details