நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகுதியில் அக்கட்சி யாரை களமிறக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரே களமிறங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களமிறங்கும் பாரிவேந்தர்! - dmk
சென்னை: பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
parivendhar
அதன்படி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும், இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெறும் என்றும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பாரிவேந்தர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.