தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி ஒரு தீவிரவாதி; அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கே எஸ் அழகிரி பேச்சு

சென்னை: சென்னைத் துறைமுக பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை

By

Published : Apr 14, 2019, 3:49 PM IST

மறைந்த சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 129ஆவது பிறந்தநாள் விழா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியவர்,

‘அண்ணல் அம்பேத்கர் தலித் மக்களின் காப்பாளனாக இருந்தார். அவருடன் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருந்தது. அவரின் புகழ் இந்தியா முழுவதும் உள்ளது. காங்கிரஸ் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. மதவாத பிரிவினை இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்காக அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டம் தான் காரணம், ஆனால் மோடி அச்சட்டத்தை எல்லாம் மதிக்காமல் இந்தியாவில் மதவாதப் பிரிவினையை உண்டாக்குகிறார்.

அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார், பிரதமர் மோடி கையில் இந்திய நாடு பாதுகாப்பாக உள்ளது என்று, ஆனால் நாட்டின் ராணுவத்திற்கு வாங்கிய கப்பல், விமானத்தின் ஆவணத்தைக் கூட பாதுகாக்கத் துப்பில்லாத பிரதமரா இந்திய நாட்டை பாதுகாக்கப் போகிறார். மோடி தான் இந்தியாவில் மதவாதத்தைத் தூண்டுகிறார். ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் மதவாதத்தைத் தூண்டுகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் மகாத்மா காந்தி சுட்டுக் கொன்றது.

எனவே மோடிதான் நாட்டின் தீவிரவாதி. மோடி கையில் அதிகாரம் இருப்பதால் அவர் எதை வேண்டுமானாலும் பேசி விடலாம் என்று நினைக்கிறார். அதேபோல் மோடியின் கையில் எடப்பாடி உள்ளதால் அவரும் எதையெதையோ பேசி வருகிறார். ஆனால் நாங்கள் அப்படி அல்ல, காங்கிரஸ் கட்சி அகிம்சை வழியைப் பின்பற்றும் கட்சி’ என்று பேட்டியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details