நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்குத் தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 இடங்களுக்கும் இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்: கட்சித் தலைமை அறிவிப்பு! - தேர்தல் அறிக்கை
சென்னை: நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சிறிய திருத்தம் செய்து இன்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது
அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் மும்மரமாகி வருகின்றனர். இதனையடுத்து, நேற்று அதிமுகவும், திமுகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, இன்று அதில் திருத்தம் செய்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.