திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15இல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - திமுக அறிவிப்பு - அன்பழகன்
சென்னை: வருகின்ற திங்கள்கிழமையன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'ஜூலை 15ஆம் தேதி மாலை 5 மணியளவில் தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என திமுக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.