தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவால் அனுபவித்த துன்பங்களை மறந்திடாதீங்க மக்களே...!' - விஜயகாந்த்

சென்னை: இதற்குமுன் ஸ்டாலினுக்கு வாக்களித்து திமுகவால் அனுபவித்த துன்பங்களை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

By

Published : Apr 15, 2019, 8:37 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தநிலையில், சிகிச்சைக்குபின் முதன்முதலாக இன்று தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சென்னையில் உள்ள பகுதிகளில் பரப்புரை வாகனத்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டபோது, 'கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஸ்டாலினை நம்பி வாக்களித்துவிடக் கூடாது, இதற்குமுன் ஸ்டாலினுக்கு வாக்களித்து திமுகவால் அனுபவித்த துன்பங்களை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எடப்பாடியை குறைசொல்லி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என ஸ்டானின் நினைக்கிறார். துரைமுருகன் வீட்டில் பணத்தை பதுக்கிவைத்துள்ள பணம் குறித்து ஸ்டாலின் என்ன பதில் தரப்போகிறார். எனவே வரும் தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' கேட்டுக்கொண்டார்.

மாலை நான்கு மணிக்கே விஜயகாந்த் வருவதாக கிடைத்த தகவலையடுத்து விஜயகாந்தை பார்க்க தொண்டர்களும், பொதுமக்களும் அதிகளவில் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் முன்பு குவிந்திருந்தனர்.

ஆனால் 6:30 மணிக்குதான் விஜயகாந்த் வந்தார். தாமதமாக வந்ததால் தொண்டர்கள் சோர்வுற்று அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். விஜயகாந்த் பரப்புரை வேனுக்குள் அமர்ந்து பேசியதால் அவரது முகத்தை காண கூடியிருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பரப்புரையில் விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details