தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நிறுவனர் முஸ்தபா இன்று சென்னை காவல் ஆணையரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவரிடம், பப்ஜி விளையாட்டை ரத்து செய்யக்கோரி புகார் மனு அளித்தார்.
காபாவை அவமதிக்கும் பப்ஜி விளையாட்டுக்கு தடை; முஸ்லீம் லீக் கட்சி மனு! - இஸ்லாமியர் அமைப்பு
சென்னை: இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காபாவை அவமதிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட பப்ஜி விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நிறுவனர் முஸ்தபா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காபாவை போன்ற மாதிரி வடிவத்தை உருவாக்கி பப்ஜி விளையாட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயல் இஸ்லாமியர்களின் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ளூ வேல் போன்ற ஆன்லைன் விளையாட்டால் பல இளைஞர்களும் மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்று சமூக சீர்கேட்டை கெடுக்கும் விதமாக ஆன்லைன் விளையாட்டான பப்ஜி தற்போது உருவெடுத்துள்ளது. இஸ்லாமியர்களின் காபாவை அவமதிப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ள பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்" என்றார்.