தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; சிசிடிவி கேமராவில் சிக்கிய திருடன்! - child kidnap

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருடன்

By

Published : Jul 15, 2019, 3:55 PM IST

ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினர், தங்கள் 3 வயதுக் குழந்தை சோம் நாத்துடன் சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தனர். ரயில் வரத் தாமதமாகும் என்பதால் குழந்தையுடன் இருவரும் ஆறாவது நடைமேடையில் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் திடீரென கண் விழித்துப் பார்த்தபோது குழந்தை மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது, ஒரு நபர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது

சிசிடிவி காட்சி

கையில் சிவப்பு நிற பையுடன் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அந்த அடையாளம் தெரியாத நபர் யார்?, என்று ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details