தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சென்னை மண்டலம் 2ஆம் இடம் - சென்னை மண்டலம்

சென்னை: சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 99 சதவிகிதத் தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

சி.பி.எஸ்.இ

By

Published : May 6, 2019, 5:15 PM IST

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2.40 மணியளவில் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 974 மையங்களில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள். அவர்களில் 16 லட்சத்து 4 ஆயிரத்து 428 மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 86.70 சதவிகிதமாக இருந்த நிலையில் இந்தாண்டு 4.40 சதவிகிதம் அதிகரித்து 91.10 சதவிகிதமாக உள்ளது.

இதில் மாணவிகளில் 92.45 சதவிகிதமும், மாணவர்கள் 90.14 சதவிகிதமும், திருநங்கைகள் 94.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டல அளவில் திருவனந்தபுரம் 99.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தையும், அஜ்மீர் மண்டலம் 95.89 சதவிகிதம் பெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 233 மாற்றுதிறனாளி மாணவர்களில் 5 ஆயிரத்து 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 13 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 25 மாணவர்கள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details