இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தமிழகம் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு - announcement
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பூவியரசன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் லட்சத்தீவு, மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.