தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் வேலுமணியின் வழக்கு தள்ளுபடி!

உயர்நீதிமன்றம்

By

Published : Jun 3, 2019, 10:45 AM IST

Updated : Jun 3, 2019, 11:51 AM IST

2019-06-03 10:40:33

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டிவந்தது. 

இதையடுத்து, தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அறப்போர் இயக்கம் பரப்பி வருவதாகவும், ஆகவே அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் வேலுமணி, ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதே வழக்கில், அறப்போர் இயக்கம் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வேலுமணி கோரியிருந்தார். 

இந்நிலையில், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

Last Updated : Jun 3, 2019, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details