தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னது 'சென்ட்ரல்' உலகின் 2ஆவது நீளமான பெயருடைய ரயில் நிலையமா...!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதன்மூலம் உலகின் இரண்டாவது நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்

By

Published : Apr 14, 2019, 9:06 AM IST

தமிழ்நாடு அமைச்சரவையின் வலியுறுத்தலின் பெயரில் சென்னையின் மத்திய ரயில் நிலையமான, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டு 'புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.இராமசந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று மாற்றப்பட்டது.

இதன் மூலம் உலகின் நீளமான பெயர் கொண்ட (ஆங்கிலத்தில்) ரயில் நிலையங்களில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் வேல்ஸ் நாட்டின் சிறிய நகரத்தில் உள்ள ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தின் ஆங்கிலப் பெயர் 'Llanfairwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch'என்று 58 எழுத்துக்களுடன் முதலிடம் வகிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் 'Puratchi Thalaivar Dr M G Ramachandran Central Railway Station'என்று 57 எழுத்துகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இதன்மூலம் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெயரை ஒரு எழுத்தில் இழந்துள்ளது சென்னை மத்திய ரயில் நிலையம்.

ABOUT THE AUTHOR

...view details