கடத்தி கொண்டு வரப்பட்ட 582 கிராம் தங்கம் பறிமுதல் - airport
சென்னை: குவைத், இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 582 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தி கொண்டு வரப்பட்ட 582 கிராம் தங்கம் பறிமுதல்
பெட்டியின் கைப்பிடிக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்த ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த நஷீா் அகமது சேக்(24) மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த இலங்கை பெண் பயணி நோனா ஷீபாயா(51), ஆகிய இரண்டு பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.