தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி! - swiggy

சென்னை: ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள், அலைபேசிகள் ஆகியவற்றை மோசடி செய்ததுடன், அதனை நகைப் பறிப்பிற்கு பயன்படுத்துவதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கைக்கோரி தங்கப்பட்டறை உரிமையாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி!

By

Published : Jun 4, 2019, 5:27 PM IST

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் அப்பகுதியில் தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தன்னை மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரசாத் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரசாத் கூறியதாவது:

சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் தன்னிடம், ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி தன்னை மூன்று இருசக்கர மோட்டார் வாகனங்கள், மூன்று கைப்பேசி ஆகியவற்றை வாங்கச் செய்தார். வாகனங்கள் மற்றும் கைபேசி ஆகியவற்றை பெற்று சென்ற இவர், ஸ்விகி நிறுவனத்துடன் இணைக்கவில்லை. சந்தேகப்பட்டு சங்கரிடம் விசாரித்தபோது, வண்டிகள் மற்றும் அலைபேசிகளை சங்கிலி பறிப்பு தொழிலுக்குப் பயன்படுத்துவதாக கூறி தன்னை மிரட்டி அனுப்பினார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்பதால் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். தன்னைப் போல் பலரையும், சங்கர் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனது வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை மீட்டுத் தர வேண்டும், என்றார்.

பாதிப்புக்குள்ளான பிரசாத் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details